MICROBS

MICROBS
BIOLOGY

Friday, June 29, 2012

நீரிழிவு நோயை குணப்படுத்த தினமும் 4 கப் டீ போதும் : ஆய்வில் தகவல்

நீரிழிவு நோயை குணப்படுத்த தினமும் 4 கப் டீ போதும் : ஆய்வில் தகவல்



தினமும் 4 கப் டீ குடித்தால் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தலாம் என்று சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. ஜெர்மனியில் உள்ள ஹெயின்ரிச் ஹெயின் பல்கலைக்கழகம் மற்றும் லிப்னிஸ் சென்டர் ஃபார் டயாபடிக் ரிசர்ச் ஆகிய நிறுவனங்கள் இணைந்து, க்ரிஸ்டியன் ஹெர்பர் தலைமையில் நீரிழிவு நோய் குறித்து  பல்வேறு பகுதிகளை சேர்ந்த 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் ஆய்வு நடத்தினர். தினமும் அவர்களுக்கு டீ கொடுக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டதில் டைப் 2 வகை நீரிழிவு நோய் கட்டுக்குள் இருப்பதை உறுதிப்படுத்தி உள்ளனர்.

மேலும், டீ குடிக்காத மற்றவர்களுடன் ஒப்பிடும் போது இவர்களுக்கு 20 சதவீதம் அதிக பாதுகாப்பு கிடைப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆனால், பால் மற்றும் சர்க்கரை சேர்க்காமல் தயாரிக்கப்படும் டீ மட்டுமே அருந்த வேண்டும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். டைப் 2 நீரிழிவு நோய்க்கு நார்ச் சத்துள்ள உணவுகள் பரிந்துரைக்கப்படுகின்றன. உணவு, உடற்பயிற்சி, மருந்துகள் இணைந்தே நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கும். இவற்றுடன் தினசரி 4 கப் டீ, டைப் 2 நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவது உறுதியாகி உள்ளது. இதனால் பக்க விளைவுகளும் பாதிப்புகளும் இருக்காது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.இப்படிக்கு ஏழுமலை BIOTECHNOLOGY 

No comments:

Post a Comment